பாவி மயக்கங் கொண்டிராதே – Paavi Mayakkan kondirathae
பல்லவி
பாவி! மயக்கங் கொண்டிராதே
பல மாயையினாலே
சரணங்கள்
1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று;
சித்தப்படி யலையும் மனதையே மாற்று;
சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்று
சேதமில்லாத வழி அறிந்து நீ சொல்லு – பாவி
2. சத்திய வழியினிற் சார்பதாய் நில்லு
சர்ப்பனை இன்னதென்று திடம் பண்ணிக் கொள்ளு
புத்திமதிகளைப் பிறருக்குச் சொல்லு
பேயின் மா தந்திரத்தை அறிந்து நீ வெல்லு – பாவி
3. உலகத்தின் வாழ்வுகள் நெடுநாள் நில்லாதே
உண்மை தவறினவனிடத்தில் செல்லாதே
எவரையும் தந்திரத்தால் மோசம் பண்ணாதே
இரட்சகர் புத்திதனை இகழ்ந்து தள்ளாதே – பாவி
4. மூடனுக்கறிவுதான் உரைத்தால் வெல்லாதே
மூர்க்கன் வெறியனென்று பேரெடுக்காதே
தேடாத் திரவியத்தைத் திருடிக்கொள்ளாதே
தேவனுரை மறந்தால் சிட்சை பொல்லாதே – பாவி
Paavi Mayakkang kondirathae
Pala Maayaiyinalae
1.Thinam paranadi Magilnthu Nee pottru
Siththappadi Yalaiyum Manthaiyae mattru
sinamulla kobaththai neriyudan aattru
Seathamillatha vazhi Arinthu Nee Sollu -Paavi
2.Saththiya Vazhiyinir saarpathaai nillu
sarppanai innathentru thidam pannikollu
Puththimathikalai pirarukku sollu
Peayin maa thanthiraththai arinthu nee vellu -Paavi
3.Ulagaththin Vaazhuvgal Nedunaal nillathae
Unmai thavarinavanidaththil Sellathae
Evaraiyum Thanthiraththaal Mosam Pannathae
ratchar puththithanai Egalnthu Thallathae -Paavi
4. Moodanukariuvthaan uraithaal vellathae
Moorkkan Veriyanentru pearedukkathae
theada thiraviyaththai thirudikollatahe
devanurai Maranthaal sitchai pollatathe -Paavi