பாவ இதயம் மாற்ற இப்போ – Paava Idhayam Maattra Ippo
பல்லவி
பாவ இதயம் மாற்ற இப்போ –
தாவும்! இரட்சகர்!
இவர் பாதம் தேடுமேன்
சரணங்கள்
1. எரியும் விளக்கைச் சுற்றியாடும்
சிறிய ஜந்தைப் போல – ஓர்
பெரிய வீம்பனாய் – ஆம்
திரியும் கோபியே! – பாவ
2. உலக டம்பம், உலக ஞானம்
உலகக் கல்வியாம் – இவ்
வலையில் சிக்கியே – ஓ
அலையும் பாவியே! – பாவ
3. அன்பாய் காக்கும் அப்பனாரை
அற்பமா யெண்ணும் – ஓ
சொற்ப ஞானியே – ஐயோ
தப்புவாயோ நீ! – பாவ
4. ஓட்டமாகப் பாய்ந்து வடியும்
ஆற்றின் ஜலத்தைப் போல – பாவி
நாட்கள் ஓடுதே – உன்
மீட்பின் நாளிதே! – பாவ
5. விருத்தன, வாலிபன், பிள்ளை என்று
ஒருக்காலும் பாரான் – என் நாள்
அறுக்க வல்லவன் – உன்
செருக்கைக் குலைப்பானே! – பாவ
6. வீடு, செல்வம், மாதா, பிதா
நாடு நகரமும் – விட்டுக்
காடு சேரவே – உன்
பாடை கூவுதே! – பாவ
Paava Idhayam Maattra Ippo
Thaavum Ratchakar
Evar Paatham Theadumaen
Yeriyum Vilakkai Suttriyaadum
Siriya Janthai pola – Oor
Periya Veembanaai – Aam
Thiriyum Gobiyae – Paava
Ulaga dambam Ulaga Gnanam
Ulaga Kaliviyaam – ev
Valaiyil Sikkiyae- Oh
Alaiyum Paaviyae- Paava
Anbaai Kakkum Appanaarai
Arpamaa Yennum- Oh
Sorpa Gnaniyae- Aiyyo
Thappuvaayo Nee – Paava
Oottamaaga Paainthu vadiyum
Aattin Jalaththai Pola- Paavi
Naatkal Ooduthae – Un
Meetpin Naalithae – Paava
Viruththana Vaaliban Pillai Entru
Orukkaalum Paaraan- En naal
Arukka Vallavan- Un
Serukkai kulaipaanae – Paava
Veedu Selvam Maatha pitha
Naadu Nagaramum- Vittu
Kaadu Searavae- Un
Paadai Koouvthae – Paava