Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே

1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்துகையில்
அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து
கடத்தியே சென்ற கர்த்தனை

2. என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்குகையில்
மாராவின் கசப்பை மதுரமாக்கி
மகிழ்வித்த மகிபனையே

3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில்
கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்து
தாகம் தீர்த்த தயவை

4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வான மன்னாவால் ஞானமாய் போஷித்த
காணாத மன்னா இயேசுவே

5. எண்ணிறந்து எதிர்ப்பினூடே
ஏளனமும் சேர்ந்து தாக்கையில்
துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டி
ஜெயகீதம் ஈந்தவரை

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks