நீ என்னால் மறக்கப்படுவதில்லை
நீ என்னால் மறந்து போவதில்லை
தாய் தன் பாலகன் மறப்பாளோ..?
மறந்து போவாளோ..?
தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல் உன்னைத் தேற்றிடுவேன்
தாகமுள்ளவன்மேல் தண்ணீரை ஊற்றுவேன் தழைக்கச் செய்திடுவேன்
சேயைக்காக்கும் தாயைப்போல உன்னைக் காக்கின்றேன்
இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்குவதுமில்லை
மறப்பேனோ.? உன்னை வெறுப்பேனோ.? மறந்து போவேனோ.?
உள்ளங்கையில் உன்னை வரைந்தேன் தோளில் சுமந்து உள்ளேன்
உன் மதில்கள் என்முன்னில் இருப்பதால் அசைக்கபடுவதில்லை
உனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும்
உன்னைத் தொடுவோர் என் கண்மணியை தொடுவதே ஆகும்
என் மறைவினில் உன்னைக் காக்கின்றேன் மனம் மடிந்து போவாயோ.?
மலைகள் விலகும் பர்வதம் அகலும் கிருபை உனைத் தாங்கும்
இமைப்பொழுது கைவிட்டாலும் உருக்கமாய் உனைச் சேர்ப்பேன்
மலைகளெல்லாம் வழிகளாகும் பாதை உயர்த்தப்படும்
பாதம் கல்லில் மோதிடாமல் கரத்தால் ஏந்திக் கொள்வேன்
நீதியின் வலக்கரத்தினால் உனை நித்தம் தாங்குவேன்