1. நாதா, ஜீவன் சுகம் தந்தீர்
நாடி வந்த மாந்தர்க்கு
இன்றும் ஜீவன் சுகம் ஈவீர்
நோயால் வாடுவோருக்கு,
நாதா, உம்மைப் பணிவோம்
பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.
2. ஆவலாய் சிகிச்சை நாடி
சாவோர் பிணியாளிகள்
வைத்தியர் சகாயர் தேடி
வருவாரே ஏழைகள்
நாதா, சுகம் அருள்வீர்,
பாதம் வீழ்ந்தோர் ரட்சிப்பீர்.
3. ஐயா! தொண்டர் ஆணும் பெண்ணும்,
கையால் உள்ளத்தாலுமே
பாசம் அநுதாபத்தோடும்
பாரம் நீக்கச் செய்யுமே;
நாதா, ஜெபம் படைப்போம்,
பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.
4. பாவம் நோயும் சாவும் நீங்கும்
யாவும் செய் உம் தயவால்
பாடுற்றோராம் மாந்தர் யாரும்
பக்த கோடி ஆவதால்
நாதர் ஆசனம் முன்னாய்
பாதம் வீழ்வார் பக்தியாய்.