மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா
2. எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா – ஐயா
3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா
4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்
5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா
அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.
ஆதியாகமம் | Genesis: 9:16