மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீ
அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள், பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு
மகிமையான பரலோகம் இருப்பதனால் – நான்
மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்
அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்
You will seek me and find me when you seek me with all your heart. — Jeremiah 29:13