மானிடரின் அப்பனாரே – Maanidarin Appanaarae

மானிடரின் அப்பனாரே – Maanidarin Appanaarae

1.மானிடரின் அப்பனாரே!
எங்கள் ஜெபம் கேட்டிடும்;
உம்மையே எம் ஐயனாரே!
சேவிக்க அருள் செய்யும்
எங்கள் சேனை
இப்போ ஆசீர்வதியும்

2.சுத்த ஆவியின் வரத்தை,
அடியார்க்கு ஈந்திடும்;
மாளும் எங்கள் தேசத்தாரை,
அன்பாக இரட்சித்திடும்
எங்கள் சேனை
வெல்ல வழி காட்டிடும்

3.பரிசுத்த ஜீவியத்தில்
யாம் தேற கிருபை செய்யும்;
ஓயா விஸ்வாச ஜெபத்தில்
நிலை நிற்க அருளும்
எங்கள் சேனை
மூப்பர் தீட்சை செய்யுமேன்

4.பாவிகளை மீட்க வந்த
பராபர வஸ்துவே!
நீசர்க்காக ஜீவன் தந்த
மானிட அம்பரனே
எங்கள் சேனை
சக்தி பெறச் செய்யுமேன்

1.Maanidarin Appanaarae
Engal Jebam Keattidum
Ummaiyae En Aiyanaarae
Seavikka Arul Seiyum
Engal Seanai
Ippo Aaseervathiyum

2.Suththa Aaviyin Varaththai
Adiyaarkku Eenthidum
Maalum Engal Deasaththaarai
Anbaaka Ratchiththidum
Engal Seanai
Vella Vazhi Kaattidum

3.Parisuththa Jeeviyaththil
Yaam Theara Kirubai Seiyum
Ooyaa Viswaasa Jebaththil
Nilai Nirkka Arulum
Engal Seanai
Mooppar Theetchai Seiyumean

4.Paavikalai Meetka Vantha
Paraapara Vasthuvae
Neesarkkaaga Jeevan Thantha
Maanida Ambaranae
Engal Seanai
Sakthi Peara Seiyumean

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks