Kavalai vaikathae maganae nee – கவலை வைக்காதே மகனே நீ

கவலை வைக்காதே

பல்லவி
கவலை வைக்காதே, மகனே, நீ
கவலை வைக்காதே.

அனுபல்லவி
கவலைவைத்திந்த உலகை – நாடி
அபலமான வரனந்தங் – கோடி – கவலை

சரணங்கள்

1. பெற்ற பிதா நமக்கொன்று,-அவர்க்
குற்ற செல்வம் நமக்குண்டு,
உத்தம வேலை கைக்கொண்டு-செய்ய
உனக்கென்ன குறையுண்டு? – கவலை

2. என்ன நான் புசிப்பேனின்று-நாளை
என்ன நான் குடிப்பேனென்று
இன்னும் வீண்கவலைகொண்டு-தினம்
ஏங்கிறாய் எப்பலனுண்டு? – கவலை

3. காகங்களை நோக்கிப்பாரு-நல்ல
களஞ்சியமுண்டோ? வேறு
தாகம் பசிக்கவைக்காரு-இரை
தருகிறாரென்று கூறு. – கவலை

4. புல்லும் பூண்டும் காட்டில் வளரும்-பிழைப்
பூட்டுவ ராரென்று கழறும்,
பொல்லாக் கவலையாற்றழலும்-மனம்
பொறுமையில்லாமல் அலறும். – கவலை

5. உடையின் கவலையாலே-மனம்
உடையுமே பல வேளை,
முடியுமோ உந்தனாலே-அல்ல
முற்றுமது பிதாவேலை. – கவலை

6. கானகலீலிப் பூப்போலே-கன
ஞானி சாலமோன் தன் மேலே
பூணவில்லையாகையாலே-பிதா
புல்லுக்குடுத்து மாப்போலே. – கவலை

7. கவலைப்பட்டோர் முழம் கூட்டும்-நரன்
காசினியிலுண்டோ? காட்டும்
குவலயமெல்லாம் போற்றும்-இயேசு
கோமான் திருமொழிகேட்டும். – கவலை

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks