கல்வாரிக்குப் போகலாம் வாரும் – Kalvaarikku Pogalam Vaarum
கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம்
காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட
சரணங்கள்
1. பொல்லாப் பகைஞர் கூட்டம்
எல்லாம் திரண்டு அங்கே
நல்லாயன் மீட்பர்தனைக்
கொல்லும் அவஸ்தை காண – கல்
2. சிவப்பங்கி தரித்தோராய்
சிரசில் முண்முடி சூண்டு,
தவத்தி லுயர்ந்த நாதன்
தவிக்கும் முகத்தைப் பார்க்க – கல்
3. ஐயோ பிதாவே என்னை
ஏன் கைவிட்டீர் என்றழும்
துய்யன் துயர சத்தம்
தொனிக்கிற தங்கே இன்னம் – கல்
4. நாவு வறண்டதினால்
தாகங்கொண்டேன் என்றாராம்
பாவிகள் காடிதனைக்
கூடிக் கொடுத்தனராம் – கல்
Kalvaarikku Pogalam Vaarum
Kaarunya Yesuvin Kaatchiyai Paarthida
Polla Pagaingar Koottam
Ellam Thirandu Angae
Nallaayan Meetpar Thanai
Kollum Avasthai Kaana
Sivapangi Tharithooraai
Sirasil Munmudi Soondu
Thavathil uyarntha Naathan
Thavikkum Mugaththai Paarkka
Aiyyo Pithavae Ennai
Yean kaivitteer Entrazhuthum
Thuiyan Thuyara Saththam
Thonikintra thangae Innam
Naauv Varandathinaal
Thaagankondean Entaraam
Paavikal kaadithanai
Koodi Koduththanaraam