இத்தனை பெரிய உலகம்
இதனை படைத்திட்டது யார்
இயற்கையாக முடியுமா (3) – இந்த படைப்பு
சூரியன் (2) சந்திரன் (2) நட்சத்திரம் (2) – எத்தனை ஆச்சரியம்
1. இயற்கை என்று சொல்லும் மாந்தரே
சிந்திப்பீர் சில நிமிடமே (2)
சூரியனை வானிலே ஓர் நாள் இரவிலே
உம்மால் நிறுத்த முடியுமா – முயன்று பாருமே – சூரியன்
2. சந்திரனை எட்டிய போதும்
பூமிக்கே நீ திரும்பியது ஏன்? (2)
உன்னுடைய வாழ்க்கையை சந்திரனில் தொடங்கிட
உன்னால் இன்று முடியுமா – முயன்று பாருமே – சூரியன்
3. நட்சத்திரத்தின் எண்ணிக்கையினை
உன்னால் இன்று கூற முடியுமா? (2)
சின்னஞ் சிறு நட்சத்திரம் ஒன்று கீழே விழுந்தால்
உன் நிலைமை என்னவாகும் சிந்தித்துப் பாரும் – சூரியன்
4. காற்று கடலின் சீற்றம் காண்கின்றாய்
அவற்றை உன்னாலா் அடக்க முடியுமா (2)
அருமை நாதர் இயேசுவோ அவற்றை அன்று அடக்கினார்
உன்னால் இன்று முடியுமோ – முயன்று பாருமே – சூரியன்