இதோ அடியேனிருக்கிறேன் – Itho Adiyean Irukirean

பல்லவி

இதோ! அடியேனிருக்கிறேன்,-என்னை
அனுப்பும்,
ஏசுவே, இப்போதே போகிறேன்.

அனுபல்லவி

இதோ! போகிறேன் நாதனே, இப்புவியில் நீர் எனக்கே
எந்த இடம் காண்பித்தாலும் உந்தன் சித்தம் செய்திடுவேன்;-

சரணங்கள்

1. மலைகள், பள்ளங்கள் தாண்டியோ,-மா கஷ்டமான
வனங்கள், கடல்கள் கடந்தோ,
தொலை தூரமாகச் சென்றோ, சுவிசேஷம் கூறும்படிச்
சொல்லும்போது நீர் ஏசுவே, துரிதமாய்ச் சென்றிடுவேன்; – இதோ

2. வறியர் அறிவீனருக்கும்,-மா துஷ்டருக்கும்,
வணங்காக் கழுத்துள்ளோருக்கும்,
அறிவி என் நாமம் என்று அடியேனை ஏவும்போது
சரியென்றிணங்கி எல்லா சனத்தையும் தேடிப் போவேன்; – இதோ

3. வயல் நிலங்கள் இப்பொழுதே-அறுப்புக்கேற்க
வளமாய் விளைந்திருக்குதே;
நயமான வேலையாட்கள் ஞாலமதில் தேடுகின்றீர்;
பயமின்றி என்னை உந்தன் பாதமதில் ஒப்புவித்தேன். – இதோ

4. உலக முடிவு மட்டுமே-சகல நாளும்
உங்களோடிருப்பேன் என்றீரே;
மலைமேலே நீர் கொடுத்த மாபெரிய கட்டளையைத்
தலைமேலே கொண்டிப்போது தரணியில் ஏகிடுவேன். – இதோ

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks