இம்மணர்க் கும்மருள் ஈயும் – Immanaark Ummarul Eeyum
பல்லவி
இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா!
ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா!
சரணங்கள்
1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்,
தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம்
2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே,
அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம்
3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி,
ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம்
4. உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்,
ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். – இம்
5. தாழ்மை பொறுமைகள், சற்குண மேன்மைகள்
தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன். – இம்
6. இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும்,
இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும். – இம்
Immanaark kummarul Eeyum, Para vaasa
Yesu kiristhaiyaa, Oh saruvesha
1.Semmaiyum Nanmaiyum Selvamum Thaarum
Devareer Evviru Pearaiyum Kaarum
2.Aathaamo Daevaiyai Antramaitheerae
Avvithamaaga Neer Intrum seiveerae
3.Anban Eesaakku Rebehakatku Irangi
Aabirahamudan Saraalai Kaaththeer
4.Unthayai Pettivar Oongi perugukavum
Oruvaru koruvar Nallanbil Nilaikavum
5.Thaazhmai porumaigal sarguna Meanmaigal
Thanthuma Thaaviyai kondu kaaththaalumean
6. Yesu kiristhuvai Neasithu vaazhavum
Inba Visuvaasa veettaar Entraavum
Immaanarku Ummarul Eeyum – இம்மணர்க் கும்மருள் ஈயும்