EZHAI MANU URUVAI EDUTHA – ஏழை மனு உருவை எடுத்த SONG LYRICS

ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே

1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடனே உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு

2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை மனு

3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே – ஏழை மனு

4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை மனு

5. மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை மனு

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks