1. என்றும் கர்த்தாவுடன்
நான் கூடி வாழுவேன்
இவ்வாக்கினால் சாகா வரன்
செத்தாலும் ஜீவிப்பேன்
பற்றாசையால் உம்மை
விட்டே நான் அலைந்தேன்
நாடோறும் வழி நடந்தே
விண் வீட்டைக் கிட்டுவேன்
2. அதோ சமீபமே
பிதாவின் வீடுதான்
என் ஞானக்கண்கள் காணுமே
ின்னும் பொன்னகர் வான்
தூயோர் சுதந்தரம்
நான் நேசிக்கும் நாடே
என் ஆவி மேலெருசலேம்
சேரத் தவிக்குமே
3. கர்த்தாவுடன் என்றும்
பிதாவே இங்கும் நீர்
இவ்வாக்கை நிறைவேற்றவும்
சித்தம் கொண்டருள்வீர்
என் பக்கம் தங்கிடின்
தப்பாமலே நிற்பேன்
கைதூக்கி என்னைத் தாங்கிடின்
போராடி வெல்லுவேன்
4. என் ஜீவன் போகும் நாள்
கிழியும் இத்திரை
சாவை அழிப்பேன் சாவினால்
சாகா உயிர் பெற்றே
என் நாதரைக் காண்பேன்
நின்று களிப்புடன்
சிம்மாசனத்தின் முன் சொல்வேன்
என்றும் கர்த்தாவுடன்.