Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)
ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் (2) – எந்தன்
1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் – ஆனந்தம்
2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்
3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்
4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்
5. இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன – ஆனந்தம்
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam