பல்லவி
எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,
அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன்.
சரணங்கள்
1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,
பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே
2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,
போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே
3. பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,
பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே
4. எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே
5. உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;
மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே
6. தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,
சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே
7. ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!
ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். – எங்கே
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam