எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam

பல்லவி

எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா,
எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா.

அனுபல்லவி

என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை
வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள். – எங்கள்

சரணங்கள்

1. இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன்
ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே;
இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம்
அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. – எங்கள்

2. மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி, உயிர்
தந்து ரட்சித்த கோனே, தாங்கையா;
சிந்தை தவறி வழி சிதறித் திரியும் பேர்கள்
சிந்தை திரும்பிச் சீவ பாதையில் சென்றொழுக, – எங்கள்

3. நேசம் வைத்தாளும் நீரே மந்தையை-நெகிழ்ந்திடாமல்;
மோசம் வராது தின முற்றுமே
தாசர் பணிவிடைகள் தவறாது வாய்க்கும்படி,
யேசுவே, நின்னடியார்க்கீயும் தேவாசீர்வாதம். – எங்கள்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks