Ellaam Paditha namathu – எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது

1.எல்லாம் சிஷ்டித்த (படைத்த ) நமது
தயாபர பிதாவுக்கு
அநந்த காலமாக,
அல்லேலூயா! மகத்துவம்,
பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக;
பார்ப்பார், காப்பார்.
வல்லமையும் கிருபையும்
அன்பும் எங்கும்
அவர் செய்கையால் விளங்கும்.

2.மண் நீசருக்கு மீட்பரும்
கர்த்தாவுமாம் சுதனுக்கும்
ரட்சிப்பின் அன்புக்காக,
அல்லேலூயா! புகழ்ச்சியும்
அநந்த ராஜரீகமும்
உண்டாய் இருப்பதாக!
பாவம், சாபம்
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்,
என்றென்றைக்கும்
பாக்கியம் எல்லாம் கிடைக்கும்.

3.மனந்திருப்பி எங்களை
பர்த்தாவாம் இயேசுவண்டையே
அழைத்து, நேர்த்தியாக
சிங்காரிக்கும் தேவாவிக்கும்,
அல்லேலூயா! புகழ்ச்சியும்
வணக்கமும் உண்டாக
வான, ஞான
வாழ்வினாலும் செல்வத்தாலும்
தேற்றிவாறார்
அதின் முன் ருசியைத் தாறார்.

4.எல்லா சிஷ்டிகளாலேயும்
பிதா குமாரன் ஆவிக்கும்
அநந்த காலமாக
அல்லேலூயா! மகத்துவம்
பலம், புகழ்ச்சி, தோத்திரம்
உண்டாய் இருப்பதாக
ஆமேன், ஆமேன்!
நீர் அநந்தம், ஆதியந்தம்,
பரிசுத்தம்
பரிசுத்தம், பரிசுத்தம்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks