Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் song lyrics
1. தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒரு மனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்திப் போற்றிடுவோம்
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா இராஜனுக்கே
2. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணிபோல காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும்
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
தேவ வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்
4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்
- சின்னஞ்சிறு தீபம் – Chinnajsiru Deepam
- இவ்வுயர் மலைமீதினில் – Evvuyar Malai Meethinil
- நித்தம் நித்தம் பரிசுத்தர் – Niththam Niththam Parisuththar
- கர்த்தர் தம் ஆசி காவல் – The Lord bless Thee
- மங்களம் ஜெயமங்களம் – Mangalam Jeyamangalam