Keerthanaigal

Thuthi Thuthi Paranaiyae Sugirthamaka – துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக

பல்லவி துதிதுதி பரன்றனையே-சுகிர்தமாக. சரணங்கள் 1. துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே, கதிதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே. – துதி 2. இருளின் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு, மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று. – துதி 3. சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம் பவிசை யிழந்தகோலம் பார் இந்த நற்காலம். – துதி 4. இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப் பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக. – துதி 5. நேயன் யேசுவைத்தேடி நிதமவர் பதம் நாடித் […]

Thuthi Thuthi Paranaiyae Sugirthamaka – துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக Read More »

Anthakaara boomi Idaiya – அந்தகாரப் பூமி இதையா

அந்தகாரப் பூமி இதையா – இருளோடி மெய் அவிரொளி உதித்ததையா சிந்தை இருள்மீடிக் கெட்டுச் சந்ததமும் உன்னைவிட்டு நிந்தைகள் இலச்சைப்பட்டு நேசமுற்று மோசம் போன சரணங்கள் தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத சேதியின் பலன்கள் தங்கும் காசினியோர்கட்குப் பொங்கும் அளவில்லாத களிப்புகளுண்டாயிலங்கும் என்றமொழி யிந்தக்காலம் உண்மையாச்சு துந்தன்சீலம் ஏழைகளுக் கனுகூலம் இன்றுவந்த துமக்கோலம் – அந்த கஷ்ட நஷ்டங் கொண்டுவாடிக் கணக்கில்லாத கவலைக ளாலுமூடிக் கர்த்தனே உனைமன்றாடிக் கண்ணீராறாய்க் கதறியச் செபித்துத் தேடிச் சத்திய சுவிசேட

Anthakaara boomi Idaiya – அந்தகாரப் பூமி இதையா Read More »

Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

பல்லவி கெம்பீரமாகவே, சங்கீதம் பாடுவோம். அனுபல்லவி நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம், – கெம் சரணங்கள் 1. மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே, சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே. – கெம் 2. படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல, குடாரமாக வெய்ததேவ வேதமே வெல. – கெம் 3. எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ, முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ. – கெம் 4. ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத் தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட.

Kembeeramakavae Sangeetham Paaduvom – கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் Read More »

Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை

யேசுவுக்கு நமது தேசத்தை – Yesuvukku Namathu Desathai பல்லவி யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்பாசமாய் முயல்வோம் தாசரே அனுபல்லவி தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசுவாசம் வைத்தன் பின் சுவிசேஷத்தை ஏந்தி – யேசு சரணங்கள் 1.கங்காநதி துவக்கி கன்னியாகுமரி வரைஎங்குமே யேசுராசா ஆளவே அவர்சிங்காரக் கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம்மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன் – யேசு 2.விந்தை பூர்விக நூல்கள் தத்துவ ஞானத்துக்குமெத்தப் பேர்போன இந்திய தேசமாம் – இதில்சத்தயமாக வந்த நித்யர்

Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை Read More »

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku தேவாதி தேவன் தனக்குச்சீர்த்தி மேவு மங்களம் அனுபல்லவி ஜீவாதிபதி நித்யனுக்குத்திவ்ய லோக ரக்ஷகனுக்குத் – தேவாதி சரணங்கள் 1.ஞானவேத நாயகனுக்குநரரை மீட்ட மகிபனுக்குத் – தேவாதி 2.பக்தர் மறவா பாதனுக்குப்பரம கருணா நீதனுக்குத் – தேவாதி 3.ஜெக சரணிய நாதனுக்குச்சீஷர் புகழும் போதனுக்குத் – தேவாதி Devaathi Devan ThanakuSeerththi Meavu Mangalam Jeevathipathi NithyanukkuDhivya Loga Rakshanukku – Devaathi 1.Gnana Vedha NaayaganukkuNararai Meetta

தேவாதி தேவன் தனக்கு – Devaathi Devan Thanaku Read More »

Deva Evveettil Intrae Meavi – தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து

பல்லவி தேவா, இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே;-தயை செய்வாய், எமது கோவே! சரணங்கள் 1. மூவர் ஒருவரான தேவா;-கிறிஸ்துநாதா,-எங்கள் முன்னவா, சத்ய வேதா! பூவில் எமக்குதவி யாருமில்லை, எம் தாதா,-யேசு புண்ணியனே, மா நீதா!-இங்கு நண்ணுவாய், மெய்ப் போதா;-தயை பண்ணுவாய், வினோதா! மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது, ஜீவனே, யேசு கோனே,-ஏழைப் பாவிகள் மீட்பன் தானே. – தேவா 2. விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக,-அதி மேன்மையுடன் சிநேகம் அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும்

Deva Evveettil Intrae Meavi – தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து Read More »

Mangalam Satha Jeya Mangalam – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா

பல்லவி மங்களம் சதா – ஜெய – மங்களம் வேதா! எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா. சரணங்கள் 1. அணைத்துக்காத்தவா, – உல – கனைத்தும் படைத்தவா; இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா. – மங்களம் 2. யேசுநாயகா, – எம் – நேசநாயகா! மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா. – மங்களம் 3. ஞானவாரியே, – திரு – வானமாரியே! ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா. – மங்களம்

Mangalam Satha Jeya Mangalam – மங்களம் சதா ஜெய மங்களம் வேதா Read More »

Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே

பல்லவி பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே, பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே. சரணங்கள் 1. பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தோரே, பரனருளால் ஜெயமடைந்தீரே, துஜம்[1] பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே, தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. – பஜி 2. நித்ய சுவிசேடமே நேர்வழியாமே, நிமலனருள் வழிபோவேமே. சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே, தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. – பஜி 3. திருக்குருசில் மரித்தோரது நேசம், தினம் மறவாதே, வைவிசுவாசம். இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம், இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். – பஜி

Pajithidum Suvisheda Thirusabaiyaarae – பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே Read More »

Deva Enai Marakathae – தேவா எனைமறக்காதே

பல்லவி தேவா எனைமறக்காதே,-இந்தச் சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே. அனுபல்லவி நேயா உனையன்றி நீசனுக்கார் கதி? தூயா கிருபைகூர், நான் மகாதோஷி. – தேவா சரணங்கள் 1. வானுலகோர்தொழும் நாதா!-இந்த மானிடர்கரையேற வந்தசகாயா! காலைமாலைகள்தோறும் கரைந்து உருகுகின்ற கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா? – தேவா 2. பாவியின் மேலிரங்கையா!-பொல்லாப் பாதகனைக்கைவிடாதே நலமெய்யா! தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத் தாங்கியாதரித்துந்தன் தயைபுரி ஐயா! – தேவா 3. என்மீறுதல் நினையாதே, எந்தன் இளமையின் பாவத்தை மனதில்வையாதே. உன்பாதஞ்சேர்ந்தேன், உவந்தேனுனையடைந்தேன், நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன். –

Deva Enai Marakathae – தேவா எனைமறக்காதே Read More »

Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன்

பல்லவி வந்தே கடைக்கண் பாருமேன்,-சர்வேசுரனே, வந்தே கடைக்கண் பாருமேன். சரணங்கள் 1. வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி, எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க. – வந்தே 2. கொள்ளை நோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே; வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே! – வந்தே 3. எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ! கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும்போக்க, – வந்தே 4. எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல் எங்கள் தஞ்சம்

Vanthae Kadaikan Paarumean – வந்தே கடைக்கண் பாருமேன் Read More »

Alleluyaa Thuthi Alleluyaa – அல்லேலூயா துதி அல்லேலுயா ஜெயம்

பல்லவி அல்லேலூயா துதி, அல்லேலுயா ஜெயம், வல்லத் திரியேகமகத்வ தேவற்கென்றும். அனுபல்லவி சொல்லரும் சுத்த சுவிசேடந்தந்தவர் தூயன் சகாயனுபாயானாம் நேயற்கு. – அல்லே சரணங்கள் 1. வானம் புவியும்படைத்த பிதாவுக்கும் மைந்தரை மீட்ட சுதனென்ற தேவற்கும் ஞானவிசேடம் வெளியிட்ட ஆவிக்கும் நம்மாலிந்நாளு மெந்நாளும் நற்றோத்திரம் – அல்லே 2. வேதோபதேச அப்போஸ்தலன்மார்களை மேதினியெங்கும் அனுப்பித்திருமறை தீதறப்போதகஞ் செய்யவழி செய்த சிங்காரக்கர்த்தர்க்கு மங்காமகத்வர்க்கு. – அல்லே 3. வாதைகள் மெத்த வதைத்துந் திருச்சபை வாடாது மிக்க செழிப்பாய் வளர்ந்திட,

Alleluyaa Thuthi Alleluyaa – அல்லேலூயா துதி அல்லேலுயா ஜெயம் Read More »

Sathiya Suvishedam Ethisaiyilum – சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும்

1.சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத் தற்பரன் அருள்புரிக சந்ததம் இத்தரை யிருள்தொலைந்து நித்திய ஒளிதரிக்க ஏகனார் தயைபுரிகவே தினம் 2.மிக்க அறுப்புண்டுலகில் தக்க ஊழியர்கள் சொற்பம் மேலவன் அறுப்பினுக்காள் தந்திடக் கட்டங்களெல்லாஞ் சகித்துப் பட்சத்துடனே யுழைக்கக் கர்த்தனார் மிகப்பலங் கொடுத்திட 3.பூமியின் குடிகள் யேசு நாமமதினா விணைந்து போற்றிட ஒருமையுடன் தேவனை தாமதமிலா தெல்லாரும் சாமி குடிலிற்புகுந்து தக்க துதியை அவர்க்குச் செய்யவே 4.நாற்றிசையினுங் கிளைகள் ஏற்றபடியே விரிக்கும் நற்றரு ஆல்போல் சபை தழைக்கவே கூற்றேனும் பசாசின்கூட்டம்

Sathiya Suvishedam Ethisaiyilum – சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version