Balaveenarin Balamum – பலவீனரின் பலமும்

பலவீனரின் பலமும்
துக்கப்பட்டிருக்கிற
பாவிகளுட திடனும்
வைத்தியருமாகிய
இயேசுவே, என் எஜமானே
கேட்டை நீக்கும் பலவானே
என் இதயம் ஜென்ம பாவம்
ஊறிய ஊற்றானது
முழுவதும் என் சுபாவம்
நன்மையை விரோதித்து
பாவத்தின் விஷத்தினாலும்
நிறையும் துர் இச்சையாலும்

ஆத்தும பகைஞராலே
காயப்பட்டுப் போன நான்
உம்மண்டைக்கு வாஞ்சையாலே
ஓடிச்சேருமுன்னேதான்
பேய் தன் கூட்டத்துடனேயும்
என்னில் மீளவும் அம்பெய்யும்

செய்ய வேண்டிய ஜெபத்தை
அசதி மறித்திடும்
உமதாவி ஆத்துமத்தை
நன்மைக்கேவுவதற்கும்
வரும்போதெதிர்க்கும்
மாமிசம் அதைத் தடுக்கும்

நோயாம் பாவிகளுக்கான
பரிகாரி இயேசுவே
அப்புறம் இவ்வாதையான
கேட்டைத்தாங்க மாட்டேனே
ஆ என் பேரிலே இரங்கும்
உம்மால் கேடெல்லாம் அடங்கும்

உம்முடைய ரத்தத்தாலே
குற்றம் நீக்கி ரட்சியும்
எனக்குமதாவியாலே
நற்குணத்தை அருளும்
கர்த்தரே, இவ்விதமாக
சொஸ்தத்தை அளிப்பீராக

என் இருதயத்தில் வந்து
தங்கும் என் சகாயரே
அப்போதுக்கத்தை மறந்து
வெற்றியை அடைவேனே
உமக்குத் துதி உண்டாக
என் ஜெபத்தைக் கேட்பீராக

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks