Aruppo Miguthi – அறுப்போ மிகுதி

பல்லவி

அறுப்போ மிகுதி, ஆட்கள் தேவை,
அருளும் நாதனே திவ்ய அருமைப்போதகனே.

சரணங்கள்

1. இந்திய தேசம் எங்கும் இருள்
எட்டி ஓடவே, எங்கள் சபைகள் நீடவே. – அறு

2. எமைப்புரந்த யேசுநாமம்
எவருங்காணவே, இருள் அடங்கி நாணவே. – அறு

3. வசன அமுதை வார்க்கும் நல்ல
வலவர் ஓங்கவே, மதிகேடு நீங்கவே. – அறு

4. நாடு நகரம் காடுமேடு
நாடுமிடமெலாம் சபைபரவு மிடமெல்லாம். – அறு

5. போதகன்மார் ஆவியோடுன்
புகழைஓதவே, மிகுப்பொய்யை மோதவே. – அறு

6. எண்ணில்லாத ஆத்துமாக்கள்
ஏங்கிநையுதே, மிகவும் இளைத்துத்தொய்யுதே. – அறு

7. ஏழையடியார் மனுக்கிரங்கும்
எமையாட்கொண்டவா, நல்லவாக்கு விண்டவா. – அறு

தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

And God made the beast of the earth after his kind, and cattle after their kind, and every thing that creepeth upon the earth after his kind: and God saw that it was good.

ஆதியாகமம் | Genesis: 1: 25

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks