Arulin Poludhaana – அருளின் பொழுதான

1.அருளின் பொழுதான
அன்புள்ள இயேசுவே,
நரரின் ஜீவனான
உம்மாலே என்னிலே
வெளிச்சமுங் குணமும்
சந்தோஷமும் திடமும்
வரக் கடவது.

2.என் பாவத்தை மன்னித்து
அகற்றியருளும்;
சினத்தை விட்டு விட்டு
என்மேல் அன்பாயிரும்.
என் நெஞ்சின் பயமற,
நீர் சமாதானங் தரப்
பணிந்து கேட்கிறேன்.

3.அடியானை மீட்டோரே,
நான் உம்மைச் சேவித்து
தெய்வீக பக்தியோடே
நடக்கிறதற்கு
என் சிந்தையை முறித்து,
புதியதாய்ச் சிஷ்டித்து,
படைத்துக் கொண்டிரும்.

4.நான் உம்மைச் சார்ந்தோனாக
எப்போதும் உண்மையில்
நிலைக்கிறதற்காக,
நீர் எனக்கறிவில்
வளர்ச்சி தந்தன்பாலே
தெய்வீக வார்த்தையாலே
வழியைக் காண்பியும்.

5.நான் லோகத்தை வெறுத்து,
என் நெஞ்சை உமக்கு
எந்நேரமுங் கொடுத்து,
பிழைக்க எனது
துரிச்சையை நீர் பேர்த்து
உம்மண்டை என்னைச் சேர்த்து,
உம்மாலே ஆற்றுமேன்.

6.நான் உம்மை உண்மையாகச்
சிநேகித் துமக்குப்
பிரிய மார்க்கமாக
நடக்க உமது
சிநேகத்தை நன்றாக
என் நெஞ்சிலே தீயாக
எரியப் பண்ணுமேன்.

7.நீர் உமதாவியாலே
திடனும் பலமும்
தந்தென்னில் தயவாலே
எல்லாம் நடப்பியும்
என்னாலே தான் நான் கெட்டோன்
நம்மைக்கெல்லாம் நான் செத்தோன்,
என் ஜென்ம பாவத்தால்.

8.தயாபரா, ரட்சித்து,
பேய்ச் செயல் யாவையும்
என் ஆத்துமத்தை விட்டு
விலக்கியருளும்.
நான் பரிசுத்தமாக
நடக்கும் படியாகத்
துணை நீர், கர்த்தரே.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks