அரசனைக் காணமலிருப்போமோ – Arasanai Kaanamaliruppomo
அரசனைக் காணமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத – அரசனை
2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத – அரசனை
3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத – அரசனை
4. அரமனையில் அவரைக் காணோமே! – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, – பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! – யூத – அரசனை
5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், – யூத – அரசனை
Arasanai Kaanamaliruppomo? Namathu
Aayulai Veenaaga Kazhippomo
Paramparai Gnanaththai Pazhippomo Yuthar
Paadanu Pavangalai Ozhippomo – Yutha
1.Yaahkobilor Velli Uthikkumentrae Israel
Raaja Sengolengum Kathikkumentrae
Aakkamilanthu Maruvaakkuraiththa Paalaam
Theerkkan Mozhi Poiyaatha Baakkiyamae – Yutha
2.Deaso Mayaththaaragai Thontruthu Paar Mearkku
Thisai Vazhi Kaatti Mun Selluthu Paar
Poosanai Kaana Nankodaikal Kondae Avar
Ponnadi Vananguvom Nadauvmintrae – Yutha
3.Alangaaramanai Ontru Thonuthu Paar Athan
Alagu Manamum Kannum Kavarnthathu Paar
Elavara Sankirkkum Nitchayam Paar Naam
Eduththa Karumam Siththiyaakidum – Yutha
4.Aramanaiyil Avarai Kaanomae Athai
Agantru Thenmaarkkmaai Thirumbuvamae
Maraintha Udu Atho Paar Thirumbinathae Bethleam
Vaasalail Namai Kondu Searkkuthu Paar – Yutha
5.Pon Thoobavarkkam Vellai Pollamittae Raayar
Porkazhal Archanai Purivomae
Van Kannan Yearothai Paaraamal Deva
Vaakkinaal thirumbinom Soraamal – Yutha