ஆண்டவரை எக்காலமும் – Andavarai Ekkalamum Potriduven

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும்

1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்

நடனமாடி நன்றி சொல்வோம்

2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்

3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்
எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல

4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே

5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

6. சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை

7. கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
அவர் செவிகள் அவனுக்கு திறந்திருக்கும்

8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்
துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks