பல்லவி
அன்பே மாறிடா திரு அன்பே – என்னைத்
தாங்கிடும் தேவன்பே
1. மாளும் வேளை எனையும் தேடின அன்பே
மயங்கிய அன்பே, அணைத்த பேரன்பே
செலுத்துவேன் துதியுமக்கே – மாறிடா
2. பாதுகாத்தீர் அரசே, இது வரையெனையும்
பயங்கர துன்பம் பல்கி வந்தாலும்
தாங்கினீர் அன்பினாலே – மாறிடா
3. சோரும் போதும் எனக்கும் திருமுகங்காட்டி
சொல் தவறாது சொந்தம் பாராட்டி
ஜொலித்திட ஜெயமளித்தீர் – மாறிடா
4. ஆழம் நீளம் உயரம் அன்பதின் அகலம்
அறிந்திடற்காயோ அழைத்தீரென் அன்பே
ஆச்சரியமே களிப்பேன் – மாறிடா
5. பொங்குதே யென்னி தயம் புது ரசத்தாலே
போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன்
தோத்திரம், தோத்திரமே – மாறிடா