அன்பே என்னாருயிரே – Anbae Ennaaruyirae
பல்லவி
அன்பே! என்னாருயிரே
இன்பே! எனதரணே!
அனுபல்லவி
துன்பமுறு முலகில் தூயா! நீயே என் கோனே!
சரணங்கள்
1. என்றும் உம்மை நேசிப்பேன்
என் முழு பலத்தாலே,
உந்தன் செயல்களையே
நன்றாகத் தியானிப்பேனே – அன்பே
2. எத்தனை நாளாக நான்
உத்தம வேந்தே! உமை
பக்தியாய்ப் பணியாமல்
கர்த்தா! உமை வஞ்சித்தேன் – அன்பே
3. தூய நல் மனதாலும்
மாய மில்லாதன்பாலும்;
நேய னுமை சேவிக்க
தூய ஆவி தந்தாளும்! – அன்பே
4. அனாதியானவனே!
அற்பன் மேல் அன்புற்றோனே!
தினமு மும்மைப் பின் பற்ற
தேவே எனையாக்குமேன்! – அன்பே
5. முச் சத்துருக்கள் என்னை
அச்சமுறத் தாக்கையில்
அட்சயன் இயேசு நாதா!
பட்சமாய்க் காருமென்னை – அன்பே
6. இந்த நீதிப் பாதையில்
உந்தனடி பின் சென்று
சந்ததமுந் திடனாய்
எந்தாய் நடக்கச் செய்வாய்! – அன்பே
7. பரன் உம்மைத் தேடாமலே
நரகத்திற் கேகுவோரை
விரைவில் நல்வழி சேர்க்க
கரையு மென்னுள்ளம் அன்பால்! – அன்பே
Anbae Ennaaruyirae
Inbae Enatharanae
Thunbamurum Ulagil Thooyaa Neeyae En Koonae
1.Entrum Ummai Neasippean
En Muzhu Balaththaalae
Unthan Seyalkalaiyae
Nantraaga Thiyaanippeanae
2.Eththanai Naalaaga Naan
Uththama Vaenthae Umai
Bakthiyaai Paniyaamal
Karththaa Umai Vanjiththean
3.Thooya Nal Manathaalum
Maaya Millathanpaalum
Neayanummai Seavikka
Thooya Aavi Thanthaalum
4.Anaathiyaanavanae
Arpan Meal Anputtronae
Thinam Ummai Pin Pattra
Devae Enaiyaakkumean
5.Mutsaththurukkal Ennai
Atchsamura Thaakkaiyil
Atchayan Yeasu Naatha
Patchamaai Kaarumennai
6.Intha Neethi paathaiyil
Unthanadi Pin Sentru
Santhathamum Thidanaai
Enthaai Nadakka Seivaai
7.Paran Ummai Theadaamalae
Naragaththirkku Keaguvorai
Viraivil Nalvazhi Searkka
Karaiyu Mennullam Anbaal