அனைத்தையும் செய்து – Anaithaiyum Seithu mudikum

அனைத்தையும் செய்து முடிக்கும்
ஆற்றலுல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும்
தடைபடாதையா

1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்

உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்

2. நான் எம்மாத்திரம்
ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்

3. என்னைப் புடமிட்டால் (நான்)
பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக்
காத்துக் கொண்டேன்

4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள்தானே அந்நாளில் காணுமே

எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks