ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் – Aayaththa Jebam Seiya Belan
பல்லவி
ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!
அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி
சரணங்கள்
1. சாத்தானால் சோதனை மெத்தவுண்டையா
சர்வாயுதம் தந்து காத்திடுமையா – ஆயத்த
2. சுருக்க நாளானதால் குதிக்கிறான் ஐயா!
சுரர் கதி இழந்த பேய்த் தூதன் தான் மெய்யாய் – ஆயத்த
3. கேட்கிற வரமெல்லாம் கிருபையாய்த் தாரும்
கேடான மனம் நன்றாய் மாறிட வாரும் – ஆயத்த
4. கருத்தான மனதுடன் ஒருமித்துப் பாடி
கனிவுடன் மன்றாட அருள் செய்யும் சுவாமி! – ஆயத்த
5. இப்படியாகவே கேட்கும் மன்றாட்டை,
இயேசுவின் மூலமாய் ஏற்றுக்கொள் ஐயா! – ஆயத்த
Aayaththa Jebam Seiya Belan Thaarum Swami
Adaikkalam Enakku Vearillai Devaavi
1.Saaththaanaal Sothanai Meththavundaiyaa
Sarvaayutham Thanthu Kaaththidumaiyaa
2.Surukka Naalaanathaal Kuthikkiraan Aiyya
Surar Kathi Elantha Peai Thoothan Thaan Meiyaai
3.Keatkira Varamellam Kirubaiyaai Thaarum
Keadaana Manam Nantraai Maarida Vaarum
4.Karuththaana Manathudan Orumiththu Paadi
Kanivudan Mantraada Arul Seiyum Swami
5.Ippadiyaakavae Keatkkum Mantraattai
Yeasuvin Moolamaai Yeattrukol Aiyya