Aaviyin Kaniyai Kodungal – ஆவியின் கனியைக் கொடுங்கள்

ஆவியின் கனியைக் கொடுங்கள் – Aaviyin Kaniyai Kodungal

பல்லவி

ஆவியின் கனியைக் கொடுங்கள் அதையே தேவன்
ஆவலாய்த் தேடுகிறார் பாருங்கள்

சரணங்கள்

1. பாவியே மாய்மால வேஷம் பண்ணுவது வெகுமோசம்
சாவு நினையாமல் வரும், சாபமும் தொடர்ந்துவரும் – ஆவி

2. எட்டியின் கனிகட்கிணை இயற்றுங் கருமங்களைத்
திட்டமுடனே துறந்து, திவ்விய செயல்புரிந்து – ஆவி

3. எத்தனை காலமாயுனில் ஏற்றக் கனி தேடும் வல்ல
கர்த்தனேசுவின் தவணை கடந்தால் வரும் வேதனை – ஆவி

4. வெட்டவே கோடாரி மரம் வேரிலிருந்து ஸ்திரம்
கெட்ட கனி கொடுப்பவர் திட்டமாய் வெட்டப்படுவர் – ஆவி

5. அன்புடன், சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு,
இன்ப நற்குணங்கள், சாந்தம், இச்சையடைக்கம், விஸ்வாசம் – ஆவி

Aaviyin Kaniyai Kodungal Athaiyae Devan
Aavalaai Theadukiraar Paarungal

Paaviyae Maaimaala vesham pannuvathu vegumosham
Saauv Ninaiyaamal varum Saabamum Thodarnthu varum

Eettiyin Kanikatkinai Eyattung karumangalai
Thittamudanae Thuranthu dhivya seyal purinthu

Eththanai Kaalamaayunil Yettra kani thedum valla
Karthaneashuvin Thavanai Kadanthaal Varum Vedhani

Vettavae koodaari Maram Vearlirunthu sthiram
Ketta kani koduppavar Thittamaai Vettapaduvar

Anbudan Santhosam Samaathanam porumai Dhayauv
Inba Nargunangal Saantham Itchaiyadakkam Visuvaasam

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks