ஆவியானவரே பரிசுத்த தெய்வமே
உம்மை ஆராதிப்பேன்
ஆட்கொண்ட சொந்தமே
பெலமுள்ள வாழ்க்கை
என்னில் வையும் தேவா
பெலவானாய் மாற்ற உம்மால் ஆகும்
பெலவீனம் போக்கிடும் தேவாவியே
பெலவீனம் மாற்றிடும் தூயாவியே
ஆராதனை (3) என்றென்றுமே – ஆவியானவரே
நண்பர்கள் என்னை ஒதுக்கினதுண்டு
சொந்தங்கள் எல்லாம் வெறுத்ததுண்டு
துணையாக வந்த என் துணையாளரே
துயரங்கள் போக்கிடும் எஜமானரே – ஆராதனை (3)
வறண்ட என் கோலை
துளிர் விட செய்தீர்
பூக்களும் கனிகளும் காண செய்தீர்
வறண்ட என் வாழ்வை
துளிர் விட செய்தீர்
கிருபையும் வரங்களும் காண செய்தீர்
மனிதர்கள் முன் தலை நிமிர செய்தீர்
ராஜாக்களோடு எனை அமர செய்தீர் – ஆராதனை (3)