ஒரு குறைவின்றி அருள் மிகும் நாதன் பாதம் அமர்ந்திடுவேன் ஆ..ஆஹா.. (2)
எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரே
யேக்கங்கள் அனைத்தையும் தீர்ப்பவரே
சிந்தை முழுவதும் இருப்பவரே
சர்வததை ஆளும் சர்வேசரே (2)
துதி உமக்கே கனம் உமக்கே
காரணராகிய பரம்பொருளே
தாழ்மையின் உருவே தரணியின் ஒளியே
தயவாய் தூக்கிய மாதயவே
முடியாத அனைத்தையும் விசுவாத்தாலே சாத்தியமாக்கிய வல்லவரே (2)
குறைவின் மத்தியில்
பிரவேசித்து முழுமையாய் மாற்றின முன்னோடியே (2)
துதி உமக்கே கனம் உமக்கே
காரணராகிய பரம்பொருளே
தாழ்மையின் உருவே தரணியின் ஒளியே
தயவாய் தூக்கிய மாதயவே
சோர்ந்திடும் நேரத்தில் சாய்ந்திட ஓர் தாபரமான தாயுள்ளமே (2)
மலைகளை பெயர்த்திடும் வல்லமையை மனதில் விதைத்திட்ட விண்ணொளியே (2)
துதி உமக்கே கனம் உமக்கே
காரணராகிய பரம்பொருளே
தாழ்மையின் உருவே தரணியின் ஒளியே
தயவாய் தூக்கிய மாதயவே