ஆராதனையின் முக்கியத்துவம் – The importance of worship
1.மனிதன் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் தேவனை ஆராதிக்கவே. (ஏசா 43:20
“படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக மனுவைப் படைத்தான் தன்னை வணங்க”
2. தேவ கட்டளையும், சித்தமும் நாம் தேவனை ஆராதிக்க வேண்டுமென்பதேயாகும்.
3. எகிப்தாகிய பாவத்திருந்து நாம் விடுவிக்கப்பட்டதன் நோக்கம் தேவனை ஆராதிக்கவே.
தேவன் பார்வோனிடம், “எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு (யாத் 8:1:20)
4.தேவனை ஆராதிக்க வேண்டுமென்பது வேதாகம அடிப்படை சத்தியமாகும். (யாத் 20:3-5)
தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக. (மத் 4:10)
5.இயேசுவும் தமது போதனைகளில் ஆராதனையை வலியுறுத்தினார். (யோவான் 4:23.24)
6.தேவன் ஆராதனைக்குரியவர், தகுதியானவர். எனவே அவரை ஆராதிக்க வேண்டும்
‘Worship’ என்ற வார்த்தை ‘Worthship’ (பாத்திரர்) என்ற வார்த்தையிலிருந்து வந்தது. (சங் 18:3)
7. தேவ பிரசன்னத்துக்குள் நுழைய (உணர) துதி ஆராதனையே வாசலாகும். (சங் 100:4)
8.புதிய உடன்படிக்கையின்படி, பரிசுத்த ஆசாரியக் கூட்டம் தெரிந்து கொள்ளப்பட்டதன் நோக்கம், ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தி அவரை ஆராதிக்கவே. (1பேது 2:5. எபி 13:15)
9.நமது ஆன்மீக செயல்பாடுகளில் ஆராதனை மட்டுமே தேவனுக்காக நாம் செய்வதாகும்.
10.நமது மகிமையின் நம்பிக்கையாகிய பரலோகத்தில் துதி, ஆராதனை மட்டுமே எப்போதும் ஏறெடுக்கப்படுகிறது. (Nonstop Worship) (வெளி 4:8)
11. தேவனை ஆராதிக்கவே சகல கோத்திரத்திலிருந்தும் தேவன் நம்மை பிரித்தெடுத்து தெரிந்து கொண்டார். (வெளி 5:9,10)
12.துதி, ஆராதனையானது ஆராதிக்கிறவர்களுக்கு, பெரிய விடுதலையையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வருகிறது. (2நாளா 20, அப் 16:24-27, தானி 6:20-22)
13.துதி, ஆராதனையானது ஆதிசபை, அப்போஸ்தலரின் அனுபவமாக இருந்தது.(அப் 2:46,47)
14.துதி, ஆராதனையானது தேவன் திருச்சபைக்கு தந்துள்ள வல்லமையான ஆயுதமாகும்
15.துதி, ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபமே தேவ சமுகத்தில் அங்கிகரிக்கப்படும். (பிலி 4:6)
16.துதி, ஸ்தோத்திர ஆராதனை மூலம் நாம் தேவனை மகிமைப்படுத்த வேண்டும். (சங் 50:23)
17. தேவன் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர். (சங் 22:3)
18.துதி ஆராதனை மூலம் தேவனுடைய தேவை சந்திக்கப்படுகிறது. அவருடைய உள்ளம் திருப்தியடைகிறது. (சங் 147:1)
19. துதிக்கிற இடத்தில் விக்கிரக வல்லமைகள் விலகி தேவ வல்லமை ஆளுகை செய்யும்
20.துதி, ஸ்தோத்திர ஆராதனையில் தேவன் பிரியப்படுகிறார். (சங் 69:30.31)
தேவன் விரும்புகிற, வேதம் முக்கியப்படுத்துகிற, ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிற ஆராதனையை நம் வாழ்வில் முக்கியப்படுத்துவோம். தேவனை ஆராதிப்போம், ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.