பொங்கலோ ஓ ஓ பொங்கலோ-Pongalo Pongal

பொங்கலோ ஓ ஓ பொங்கலோ பொங்கலோ ஓ ஓ பொங்கலோ…
(பொங்கலோ- 6)

நம்ம சாமி தந்த நல்ல பூமி இது
அதனாலே நன்றி சொல்லவோம்.
தாய் மண்ணின் கனிகளால் தமிழ் தாயின் வரங்களால்
மாண்போடு வாழ்ந்திடுவோம்.

1).
கடவுளே கதிரவனாய்
மண்ணகத்தை வளமாக்கி உழைப்பின் கனிகளை தந்தவரே
உழவனை காத்திட உழுதுண்டு வாழ்ந்திட
இயற்கையின் இறைவனை தொழுதிடுவோம்.
*கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று/
பண்பாடுவோம் தமிழர் திரு நாள் இன்று.

2)
ஆண்டவர் செய்திருக்கும் எல்லா நன்மைகளுக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேனோ ?
விளைச்சலை பெறுக்கினார் கனிகளால் நிரப்பினார்
நலம் தரும் காரியம் செய்தாரே
கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று
பண்பாடுவோம் தமிழர் திரு நாள் இன்று.

3)
பழையன கழிந்தன புதியன புகுந்தன
போகி திருநாள் (நம்) புது நாளே
கால் நடை
விளங்குகள் காத்திடும் செல்வங்கள்
தாங்கிடும் கடவுளின் திருகரங்கள்.
கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று/
பண்பாடுவோம் தமிழர் திரு நாள் இன்று.

4)
உறவுகள் வாழவே உயிரையும் தந்த நம்
இயேசுவின் அன்பினை சாற்றிடுவோம்.
உள்ளத்தில் உவகை பொங்க
உலையினில் பால் பொங்க தமிழ் போல் இனிக்கட்டும் உறவுகளே.
கொண்டாடுவோம் நன்றி பெருநாள் இன்று
பண்பாடுவோம் தமிழர் திரு நாள் இன்று.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks