SHEHECHEYANU | BLESSING BEGINS

பயப்படாதே தேவ மக்களே
அதிசயம் பார்க்க போறோமே-2
கலங்காதே அன்பு மக்களே
ஆண்டவரோ கூட இருக்கிறார்-2

ஷெஹெஹியானு ஷெஹெஹியானு
ஆரம்பமே ஆசீர்வாதங்கள்
ஷெஹெஹியானு ஷெஹெஹியானு
தேவனாலே புதிய ஆரம்பம்

1.வலதுபுறத்தில நாங்க வளரப்போறோம்
இடதுபுறத்தில நாங்க எழும்பப்போறோம்
கிழக்கு மேற்குல நாங்க பெருகப்போறோம்
சாபத்தை எல்லாம் தூக்கி அடிக்கப்போறோம்
வானத்தப்பாத்தா ஒத்தாசை வருமே
பூமியிலே பொன் விளையுமே-2-ஷெஹெஹியானு

2.ஒரேப் மலையிலே கர்த்தர் நிற்கிறார்
காதேஸ் நிலத்தையே அதிர வைக்கிறார்-2
காற்றை பார்க்காதே மழையும் பார்க்காதே
கர்த்தர் செய்வது அதிசயமே-2-ஷெஹெஹியானு

3.இயேசு தொட்டதும் அதிசயமே
அவர் வார்த்தை செய்ததும் அற்புதமே
காற்றை அடக்கின கர்த்தர் நீரே
கடல் மேல் நடந்து காட்டினீரே
இன்றும் புதிய துவக்கம் தானே
எதையும் இப்போ செய்வாரே-2-ஷெஹெஹியானு

பயப்படாதே தேவ மக்களே- Bayapadathe Deva Makkalae

✝️ ஒரு நிமிட தியானம்✝️

கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.

சங்கீதம் 7:8

நியாயம், நீதி எங்கே கிடைக்கும் என்ற சூழ்நிலையில் உள்ளது..நியாயமும், நீதியும் எங்குமே பார்க்கமுடியாத நிலை…உங்க வாழ்க்கையில், வேலையில், தொழிலில், ஊழியத்தில் நியாயம் கிடைக்காமல் இருக்கலாம்…மாயமான பொய்யான தோற்றத்தை உண்டுபண்ணி உங்களுக்கு நியாயம் கிடைக்கப்பண்ணாமல் இருக்கலாம்…உங்கள் நீதி எடுப்படாமல் இருக்கலாம்.. உங்களுக்காக பேசக்கூடியவர்கள் யாரும் இல்லாமல் இருக்கலாம்.. கவலைப்படாதீங்க… உங்க உண்மை நிச்சயம் நீதியை விளங்கப்பண்ணும்…நீங்க யாருக்கும் அநீதி செய்யாதீங்க..நீங்க அநீதி செய்யும் போது உங்க தலைமுறையான பிள்ளைகள் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியாது….நீங்க யாருக்கு அநீதி செய்தீர்களோ அவர்கள் உண்மையாக இருக்கும்போது ஆண்டவர் அவருக்கு நியாயம் செய்வார்…உங்க நேர்மைக்கு பதில் நிச்சயம் வரும்..ஆண்டவர் உங்கள் உண்மையின்படி நீதி செய்வார்..காரியம் மாறும்..நீங்க உண்மையாக இருந்து ஆண்டவரை நம்புங்கள், அல்லேலூயா, ஆமென்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks