நிரந்தரமானவரே நித்திய கன்மலையே
உம்மையே நேசிப்பேன்
உம்மை நான் சார்ந்திடுவேன்
1.எத்தனை துன்பங்கள்
எனை சூழ்ந்த போதும்
கைவிடாமல் என் கரம் பிடித்தீர்
இதுவரை நடத்தி கிருபைகள் தந்து
காலமெல்லாம் உம்மை துதிக்க வைத்தீர்
2.நேசித்தவர்கள் உதறினபோதும்
கல்வாரி நேசத்தால் அணைத்த இயேசுவே
உம் அன்பு உயர்ந்தது
உம் அன்பு பெரியது
உம் அன்பு மாறாதது, உம் அன்பு சிறந்தது
3.மனிதர்கள் வார்த்தையால் காயப்பட்ட போதும்
காயப்பட்ட கரங்களால் அணைத்தீறையா
ஜீவனை கொடுத்த இயேசுவின் அன்பிலும்
மேலான அன்பு இல்லை ஐயா
4. நம்பிக்கையின் நாயகர் நீர்தானே
நம்பிடுவேன் உம்மை எக்காலமும்
விரைவில் வருவீர் உம்மோடு சேர்த்துக் கொள்வீர்
காத்திருப்பேன் உம் முகத்தை தரிசிக்க