கர்த்தாவே என் பெலனே -Karthavae en balanae

பல்லவி

கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூடுவேன்
உத்தமமானதும் வழிதானே

சரணங்கள்

1. என் கன்மலையும் என் கோட்டையும்
என் ரட்சகரும் என் தேவனும்
என் கேடகமும் ரட்சண்யக் கொம்பும்
என் உயர்ந்த அடைக்கலமானவர் – கர்த்தாவே

2. மரணக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது
துர்ச்சன ப்ரவாகம் பயப்படுத்தினது
பாதாளக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது
மரணக் கண்ணிகளென் மேல் விழுந்தது – கர்த்தாவே

3. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்
பாதங்களின் கீழ் இருள் இருந்தது
கேரூபீன் மேலேறி வேகமாய்ச் சென்றார்
காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார் – கர்த்தாவே

4. இருளை தமக்கு மறைவிடமாக்கி
மேகங்களைக் கூடாரமாக்கினார்
வானங்களில் கர்த்தர் குமுறினார்
தமது சத்தத்தைக் தொனிக்கப்பண்ணினார் – கர்த்தாவே

5. தயவுள்ளவனுக்குத் தயவுள்ளவரே
உத்தமனுக்கு நீர் உத்தமரே
புனிதனுக்கு நீர் புனிதரானவரே
மாறுகிறவனுக்கு நீர் மாறுகிறவரே – கர்த்தாவே

6. சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்
மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்
இருளை நீர் வெளிச்சமாக்குவீர் – கர்த்தாவே

7. உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
தம்மாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்து பிடிப்பேன்
நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன் – கர்த்தாவே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks