தத்தமாய்த் தந்தேன் என்னையே-Thaththamaai Thanthean Ennaiye

பல்லவி

தத்தமாய்த் தந்தேன் என்னையே
நித்தமும் உந்தனின் சேவைக்கே

சரணங்கள்

1. துட்டனாய் அலைந்த பாவி நானே
கட்டளை யாவையும் மீறினேனே
பட்டமா பாடுகள் போதுமென்றே
கிட்டி உம் பாதமே வந்து நின்றே – தத்தமாய்

2. எந்தனின் உள்ளத்தில் ஆட்சி செய்வீர்
சிந்தின ரத்தத்தால் சுத்தம் செய்வீர்
எந்த இடத்திலும் எந்நேரமும்
உந்தனின் சாட்சியாய் நின்றிடவே – தத்தமாய்

3. நீர் தந்த வேலையை நித்தமும் நான்
நேர்மையாகச் செய்திட சக்தி ஈவீர்
ஏழ்மையில் ஏங்கிடும் மாந்தருக்கு
தாழ்மையாய்த் தொண்டு நான் செய்திடவே – தத்தமாய்

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து,

தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்;

அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;

அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம்

மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான

பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்;

அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு,

அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

Wherefore the Lord said,

Forasmuch as this people draw near me with their mouth,

and with their lips do honour me,

but have removed their heart far from me,

and their fear toward me is taught by the precept of men:

Therefore, behold,

I will proceed to do a marvellous work among this people,

even a marvellous work and a wonder:

for the wisdom of their wise men shall perish,

and the understanding of their prudent men shall be hid.

ஏசாயா :Isaiah: 29 ✝️

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks