நான் பாவச் சேற்றினிலே -Naan Paava saettrinilae

சரணங்கள்

1. நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்
நான் சாபத்திலே மாண்டேன்
எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி
இயேசென்னை மீட்டாரே

பல்லவி

என் நாவிலே புதுப் பாட்டுகள்
என்றென்றும் கவி தங்கிடும்
மா சந்தோஷம் மறு பிறப்பீந்து
மன இருள் நீக்கினார்

2. என் ஆத்த மீட்பை அருமையாய்
இயேசாண்டவர் எண்ணியதால்
சொந்தம் தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய்ச்
சிந்தி இரட்சித்தாரே – என்

3. கார்மேகம் போல் என் பாவங்கள்
கர்த்தர் அகற்றினாரே
மூழ்கியே தள்ளும் சமூத்திர ஆழம்
தூக்கி எறிந்தாரே – என்

4. என் ஜென்ம கரும பாவங்கள்
எல்லாம் தொலைத்தாரே
மன்னித்து என்றும் மறந்து விட்டாரே
மா பரமானந்தம் – என்

5. இரத்தாம்பரம் போல் சிவப்பான
இதய பாவங்களை
பஞ்சையும் போலவே வெண்மையுமாக்கி
தஞ்சம் எனக்கீந்தார் – என்

6. மேற்குத் திசைக்கும் கிழக்குக்கும்
மா எண்ணிலா தூரம்
எந்தன் பாவங்கள் அத்தனை தூரம்
இயேசு விலக்கினார் – என்

7. அங்கேயும் சீயோன் மலைமீதே
ஆனந்தக் கீதங்கள்
ஆயிரம் ஆயிரம் தூதர்கள் சூழ
அன்பரைப் பாடிடுவேன் – என்

நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத

பிரதான ஆசாரியர் நமக்கிராமல்,

எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,

பாவமில்லாதவராயிருக்கிற

பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும்,

ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை

அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

15.For we have not an high priest

which cannot be touched with the

feeling of our infirmities;

but was in all points tempted

like as we are, yet without sin.

Let us therefore come boldly unto the throne of grace,

that we may obtain mercy,

and find grace to help in time of need.

எபிரெயர் : Hebrews : 4 ✝️?

கேனாசின் குமாரன் பெயர் என்ன ❓?‍♂️

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks