துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா
1. அன்பு பெருகுதையா -என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே
2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே
3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே
4. நோய்கள் நீங்குதையா –உம்மை
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே
5. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே