நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்
மீட்படைய நொறுக்கப்பட்டார்-2
நீதிமானாக்க பலியானீர்
நிநத்திய ஜீவன் தந்தீர்
அன்பே, பேரன்பே
1.காயப்பட்டீர் நான் சுகமாக
என் நோய்கள் நீங்கியதே
சுமந்து கொண்டீர் என் பாடுகள்
சுகமானேன் தழும்புகளால்
இம்மானுவேல் இயேசு ராஜா
இவ்வளவாய் அன்புகூர்ந்தீர்-அன்பே
2.சாபமானீர் என் சாபம் நீங்க
மீட்டீரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் இம்மானுவேல்
3. ஏழ்மையானீர் சிலுவையிலே
செல்வந்தனாய் நான் வாழ
பிதா என்னை ஏற்றுக்கொள்ள
புறக்கணிக்கப்பட்டீரையா-இம்மானுவேல்
4. மகிமையிலே நான் பங்கு பெற
அவமானம் அடைந்தீரையா
ஜீவன் பெற சாவை ஏற்றீர்
முடிவில்லா வாழ்வு தந்தீர்-இம்மானுவேல்