ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae
பல்லவி
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!
துதிமிகு தேவா ஸ்தோத்திரமே!
அனுபல்லவி
நேத்திரம்போல் கடந்தாண்டிலெமை
காத்தீர் கருணையால் நிதம் உண்மை! – ஸ்தோத்
சரணங்கள்
1. எத்தனை ஆபத்து சோதனைகள்
எமக்கு நேரிட்ட பல இடர்கள்
அத்தனையும் எமை அணுகாமல்
ஆதரித்தீர் பிழை நினையாமல்! – ஸ்தோத்
2. ஆனந்தத்துடன் புது வருடம்
ஆரம்பித்தோம் ஆவலுடன்
நானிலம் புரக்க அவதரித்த
நாதனைப் புகழ்வோம் நன்றியுடன் – ஸ்தோத்
3. இப்புது ஆண்டினில் அடியார்க்கு
இகபர நன்மைகள் அனுக்கிரகித்து;
அப்பனே கிருபையின் செட்டையினுள்
அற்புதமா யணைத் தாதரிப்பாய் – ஸ்தோத்
4. வெற்றியாய் யுத்தத்தில் முன்செல்ல
வெகுவாய் ஆத்ம ஜெயங்கள் கொள்ள;
பற்றியே நடந்துனின் பாதை செல்ல
பகருவாய் உன்னத வரங்கள் செல்ல – ஸ்தோத்
5. தேசங்கள் வாழியே தீமையற
தேவனைத் தேடியே தோஷமற,
ஓசன்னா பாடவே ஓகையுற
உய்யவே அருள்வாய் ஊழியற – ஸ்தோத்
Sthothiram Sthothiram Sthothiramae
Thuthi Migu Deva Sthothiramae
Neathiram Pol Kadanthandil Emmai
Kaatheer Karunaiyaal Nitham Unmai
1.Eththanai Aabathu Sothanaigal
Emakku NEaritta pala edargal
Aththanaiyum Emai Anukaamal
Aatharitheer Pizhai Ninaiyaamal
2.Aananthathudan Puthu Varudam
Aarambithom Aavaludan
Nanilam Purakka Avatharitha
Naathanai Pugalvom Nantriyudan
3.Epputhu Aandinil Adiyaarku
Egabara Nanmaigal Anukirakithu
Appanae Kirubaiyin Settayinul
Arputhama Enai Thatharippaai
4.Vettriyaai Yauththathil Mun sella
Veguvaai Aathma Jeyangal kolla
Pattriyae nadanthunin Paathai sella
Pagaruvaai Unnatha varangal Sella
5.Deasangal vaazhiye theemaiyara
Devanai Theadiye Thoshamara
Osanna paadave oogaiyura
Uiyyave arulvaai Uzhiyara