சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.
வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ..
கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..
செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ..