பல்லவி
தாகம் மிகுந்தவரே அமர்ந்த
தண்ணீரண்டை வாரும்- ஓ!
சரணங்கள்
1.ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன்
இன்பவாக்குத்தத்தமே – நம்பி
வேகமாக ஓடி வாருமெனதிடம்
வேண்டியதைத் தருவேன். – ஓ!
2.காசுபணமது அற்றுலகந்தன்னில்
கஷ்டப்படுவோரே – விசு
வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி
வாங்கியே சாப்பிடுமே.- ஓ!
3.பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள்
பட்டு உழல்வோரே – வாரும்
நேரே உமக்கிளைப்பாறுதலாவியை
நேசமாய்த் தந்திடுவேன்.- ஓ!
4.அப்பமல்லாத பொருளையும் திருப்தி
ஆகாத வஸ்துவையும் – நம்பித்
தப்பிதமாய்ப் பிரயாசத்தையும் பணம்
தன்னையுமேன் கெடுப்பீர்?- ஓ!
5.கர்த்தரைக் கண்டடையத்தக்க காலத்தில்
கண்டிடுமே உடனே – உந்தன்
அத்தன் சமீபமாக இருக்கும் போதே
ஆவலாய்க் கூப்பிடுமே.- ஓ!