1. உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்.
விண் ஸ்தானமே!
கர்த்தா, எந்நாள்
உம் திருத் தாள்
சேவிப்பேனே!
2. பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்.
3. அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்.
4. தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
பொன் வீணை வாசிப்பவர்
இசை பாடக் கேட்பேன்.
5. சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்.
6. கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்;
நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்.