1. லோகநாதா, மண்ணோர் மீள
உந்தன் ரத்தம் சிந்தினீர்;
கெட்டுப்போனோர் என்றும் வாழ
உம்மைப் பலியாக்கினீர்.
நன்றி கெட்ட மாந்தர்க்கென்றும்
தயவாகத் தேவரீர்
எண்ணிறந்த நன்மை சற்றும்
கைமாறின்றி ஈகிறீர்.
2. உந்தன் நேசக் காந்தியாலும்
எங்கள் நெஞ்சுருகியே
அன்பில்லாத தன்மை யாவும்
நீங்கச்செய்யும், இயேசுவே
அதால் நாங்கள் ஏற்பதிலும்
ஈதல் நன்றென்றுணர்வோம்
நீரே தந்த ஆஸ்தியிலும்
தான தர்மம் செய்குவோம்.
3. சிறியோர்க்குச் செய்த நன்மை
உமக்கிட்ட தர்மமே
என்றந்நாள் நீர் சொல்லும் வாக்கை
கேட்பதின்ப பாக்கியமே
சொத்து செல்வம் ஏதும் அற்ற
எளியோரால் தேவரீர்
தான தர்மம் கேட்பதாக
இதினாலே போதித்தீர்.
4. லோக நாதா, மண்ணோர் மீள
உந்தன் ரத்தம் சிந்தினீர்;
கெட்டுப்போனோர் என்றும் வாழ
உம்மைப் பலியாக்கினீர்
உம்மை அண்டிப் பற்றிக்கொள்ள
நம்பிக்கை விஸ்வாசமும்
மா சிறந்த மேன்மையுள்ள
திவ்விய அன்பும் ஈந்திடும்.