Naan Devareerai Kartharae – நான் தேவரீரை கர்த்தரே

1.நான் தேவரீரை, கர்த்தரே,
துதிப்பேன்; அடியேன்
எல்லாரின் முன்னும் உம்மையே
அறிக்கை பண்ணுவேன்.

2.ஆ, எந்தப் பாக்கியங்களும்
உம்மால்தான் வருமே;
உண்டான எந்த நன்மைக்கும்
ஊற்றானவர் நீரே.

3.உண்டான நம்மை யாவையும்
நீர் தந்தீர், கர்த்தரே;
உம்மாலொழிய எதுவும்
உண்டாகக் கூடாதே.

4.நீர் வானத்தை உண்டாக்கின
கர்த்தா, புவிக்கு நீர்
கனிகளைக் கொடுக்கிற
பலத்தையும் தந்தீர்.

5.குளிர்ச்சிக்கு மறைவையும்
ஈவீர்; எங்களுக்குப்
புசிக்கிறதற் கப்பமும்
உம்மால் உண்டாவது.

6.யாரால் பலமும் புஷ்டியும்
யாராலேதான் இப்போ
நற்காலஞ் சமாதானமும்
வரும், உம்மால் அல்லோ.

7.ஆ, இதெல்லாம், தயாபரா,
நீர் செய்யுஞ்செய்கையே;
நீர் எம்மைப் பாதுகாக்கிற
அன்புள்ள கர்த்தரே.

8.உம்மாலே வருஷாந்திரம்
அல்லோ பிழைக்கிறோம்;
உம்மாலே நாங்கள் விக்கினம்
வந்தாலும், தப்பினோம்.

9.பாவிகளான எங்களைச்
சுறுக்காய் தண்டியீர்,
உம்முமையோரின் பாவத்தை
அன்பாய் மன்னிக்கிறீர்.

10.இக்கட்டிர் நாங்கள் கூப்பிட்டால்,
நீர் கேட்டிரங்குவீர்.
நீர் எங்களை மா தயவால்
ரங்சித்துத் தாங்குவீர்.

11.அடியார் அழுகைக்கெல்லாம்
செவிகொடுத்து, நீர்
எங்கள் கண்ணீர்களை எல்லாம்
எண்ணி இருக்கிறீர்.

12.எங்களுடைய தாழ்ச்சியை
அறிந்து நீக்குவீர்,
பிதாவின் வீட்டில் எங்களைக்
கடைசியில் சேர்ப்பீர்.

13.ஆ, கனிகூர்ந்து பூரித்து
மகிழ், என் மனமே,
பராபரன் தான் உனது
அனந்த பங்காமே.

14.அவர் உன் பங்கு, உன்பலன்
உன் கேடகம், நன்றாய்த்
திடப்படுத்தும் உன் திடன்;
நீ கைவிடப்படாய்.

15.உன் நெஞ்சு ராவும் பகலும்
துக்கிப்பதென்ன, நீ
உன் கவலை அனைத்தையும்
கர்த்தாவுக் கொப்புவி.

16.உன் சிறு வயது முதல்
பராமரித்தாரே;
கர்த்தாவால் வெகு மோசங்கள்
விலக்கப்பட்டதே.

17.கர்த்தாவின் ஆளுகை எல்லாம்
தப்பற்றதல்லவோ;
ஆம் அவர் கை செய்வதெல்லாம்
நன்றாய் முடியாதோ.

18.ஆகையினால் கர்த்தாவுக்கு
நீ பிள்ளைப் பக்கியாய்
எப்போதுங் கீழ்ப்படிந்திரு,
அப்போதே நீ வாழ்வாய்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks