1. தூய வீரர் திருநாளை
பக்தி பரவசமாய்
ஆண்டுதோறும் வந்திப்போமே
எதிர்நோக்கி ஆவலாய்.
2. தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் போலும்
வல்ல வீர செயல்கள்
செய்தார் என்றும் வாழ்த்துவோமே
பாடுவோம் தீங்கீதங்கள்.
3. விசுவாசம் மா நம்பிக்கை
ஓங்கி உம்மை நேசித்தார்
மாட்சியோடும் வெற்றியோடும்
தூயர் வீரர் ஆயினார்.
4. பாரின் இன்பம் துறந்திட்டே
வீரர் செய்கை புரிந்தார்
இப்போ வானில் தூயர் கூட்டம்
தாமும் ஒன்றாய்ச் சேர்ந்திட்டார்.
5. கிறிஸ்துவோடு பாத்தியராகி
விண்ணின் மாட்சி அடைந்தார்;
நாம் முன்னேறப் பாதம் வீழ்ந்து
பணிவாக ஜெபிப்பார்.
6. பாரின் கஷ்ட வாழ்க்கை ஈற்றில்
மாய்க்கும் துன்பம் நீங்கிப் போம்
தந்தை வீட்டில் நாமும் சேர்ந்து
நித்திய மாட்சி கெலிப்போம்.