SEERESU BAALAN JEYAMANU VELAN – சீரேசு பாலன் ஜெயமனு வேலன்

சீரேசு பாலன் ஜெயமனு வேலன்
சீர் நாமத்தைத் தினமே போற்றுவோமே

அனுபல்லவி

பாராளும் வேந்தன் பகரொண்ணா மைந்தன்,
தாராள மாகத் தாமே மனுவான — சீரே

சரணங்கள்

1. எண்ணரும் பெருமான் ஏழைச் சாயலாக
மண்ணி லேகின மாட்சிமை யாலே,
விண்ணவர்கள் போற்ற, வெற்றிக்கவி சாற்ற
வண்ணம் பாடி நாம் மகிழ்ந்திட வேண்டாமோ? — சீரே

2. உன்னத பரனுக் கொப்பில்லா மகிமை
இந்நிலத்தினில் எழில்சமா தானம்,
மன்னுயிர்கள் மீது மாபிரியம் ஓங்க
தன்னுயிர் தந்த தயவை என்ன சொல்வோம்? — சீரே

3. பாவப் பிணியாலே பாதகரைப் போலே
சாபத்தை நம்மேல் நாம் தேடினோமே,
கோபத்தை ஒழித்தே குவலயத்தை மீட்க
தீபமாய் வந்த தேவமைந்தனான — சீரே

4. நித்தனே, என் பாவம் எத்தனையானாலும்
சித்தம் உருகிச் சீர்கூற வேணும்,
அத்தனே, உன் பாதம் அண்டினேன் இப்போதும்;
பத்தியாய் உன்னைப் பகருவேன் எப்போதும் — சீரே

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks